முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி… அது வெறும் புரளிதானாம்

1426584475-7652ரஜினியை முருகதாஸ் இயக்கப் போகிறார், தயாரிப்பு ஆஸ்கர் ஃபிலிம்ஸ் என சில ஊடகங்கள் போட்டிப் போட்டு யூகச் செய்தியை அடித்துவிட்டன. இரண்டே நாளில் அப்படியெல்லாம் இல்லை என உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

லிங்கா பஞ்சாயத்து இன்னும் முடியாத நிலையில் இன்னொரு படம் குறித்து யோசிக்கும் நிலையில் ரஜினி இல்லை. சமீபத்தில் அவர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை சந்தித்த போதும் இதையே கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முருகதாஸ் தனது புதிய இந்திப் படத்தை நேற்று தொடங்கினார். மௌனகுரு படத்தின் தழுவலான இதில் அருள்நிதி நடித்த வேடத்தில் சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். ஆக, இப்போதைக்கு முருகதாஸ், ரஜினி இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries