விக்ரமுடன் ஜோடி சேர்ந்தது மகிழ்ச்சி: காஜல் அகர்வால்

16a724b9-ea87-4227-b873-52f10404be4b_S_secvpfகாஜல் அகர்வால் ஏற்கனவே விஜய், சூர்யா, கார்த்தி போன்றோருடன் நடித்துள்ளார். இதுவரை விக்ரமுடன் நடிக்கவில்லை. தற்போது முதல் தடவையாக விக்ரம் ஜோடியாக புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல கதாநாயகிகளின் கடுமையான போட்டிக்கு மத்தியில் இந்த வாய்ப்பு அவருக்கு கிட்டி உள்ளது. இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது, விக்ரமுடன் நடிக்கப் போவதை நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. விக்ரமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடிப்பில் ஈர்க்கப்பட்டேன். திறமையான நடிகர். கடினமாக உழைக்கக் கூடியவர்.

அவரோடு சேர்ந்து நடிப்பதை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கதையும் எனது கேரக்டரும் அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பது நிஜமாகவே எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது என்றார்.

இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதில் இன்னொரு நாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். காஜல் அகர்வால் தற்போது தனுஷ் ஜோடியாக ‘மாரி’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் படமொன்றில் விஷால் ஜோடியாகவும் நடிக்கிறார். இரு இந்தி படங்களும் கைவசம் உள்ளன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries