கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு!

14e9ee93-4217-4a84-84e4-62eb10fed20b_S_secvpfசுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ஜீவா’ படத்திற்குப் பிறகு விஷ்ணு தற்போது, ‘இன்று நேற்று நாளை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவி இயக்கி வருகிறார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தையடுத்து கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஷ்ணு. ‘ஜெயங்கொண்டான்’ படம் மூலம் இயக்குனரான கண்ணன், ‘கண்டேன் காதலி’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, கடைசியாக ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

தற்போது கண்ணன் விஷ்ணுவை வந்து ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜய் ராஜ் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தில் முதலில் அட்டகத்தி தினேஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விஷ்ணு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படம் பற்றிய முழுவிவரம் விரைவில் வெளியிடவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries