இறுதி கட்டத்தை நெருங்கும் ஜெயம் ரவியின் அப்பாடக்கர்

ce9bc960-a107-4f67-9953-2298c6b92840_S_secvpfஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். திரிஷா, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் விவேக் மற்றும் சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. பட காட்சிகளை படமாக்கிவிட்ட படக்குழுவினர் தற்போது இரண்டு பாடல்களை மட்டும் படமாக்கவுள்ளனர். இதற்காக ஜெயம் ரவி, திரிஷா மற்றும் படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளனர்.

காமெடி கலந்த பொழுது போக்கு படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries