சூர்யா-சிம்புவை கலாய்த்த பவர் ஸ்டார்

229ccb0a-b3e3-4073-aee2-310f3b566f1e_S_secvpfதமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான பவர் ஸ்டாரை இந்த சினிமா உலகம் நடிகராக ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவரை காமெடியனாகவே பார்த்தது. அவர் தயாரித்து நடித்த ‘லத்திகா’ படத்தை ஒரே தியேட்டரில் 300 நாட்களுக்கும் மேல் ஓடவைத்து சாதனை படைத்தவர். இதனாலேயே தமிழ் சினிமா இவர் பக்கம் தனது பார்வையை திருப்பியது.

அதன்பலன், சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்தார். இப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க அவரை பலரும் ஒப்பந்தம் செய்தனர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று கூறப்படும் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐ’ படத்தில்கூட காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவ்வாறு சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்ட பவர் ஸ்டார், பொது விழாக்களிலும், சினிமா விழாக்களிலும் தனது வேடிக்கையான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

பொது மேடைகளில் சூப்பர் ஸ்டாருக்கு போட்டி நான்தான். என்னுடைய அடுத்த ஜோடி ஐஸ்வர்யா ராய்தான் என்று வேடிக்கையாக பேசி வந்த பவர் ஸ்டார், தற்போது பிரபல சமூக இணையதளமான டுவிட்டர் பக்கத்திலும் சக நடிகர்களை கலாய்க்க ஆரம்பித்துள்ளார்.

அவருடைய டுவிட்டர் பக்கத்தில் சூர்யா, சிம்பு ஆகியோரை பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கலாய்த்துள்ளார். சிம்பு பற்றி குறிப்பிடும்போது, தம்பி சிம்பு, வாலுனு வச்சதுனாலதான் ரிலீஸ் ஆகல போல, பேசாம தலனு சேஞ்ச் பண்ணி ரிலீஸ் பண்ணுங்க.

கண்டிப்பா ஹிட் ஆயிடும் என்று கூறியுள்ளார். மேலும் சூர்யா பற்றி அவர் கூறும்போது, ஹாய் பிரதர் சூர்யா, டுவிட்டருக்கு உங்களை வரவேற்கிறேன். நான் உங்களை பின்பற்றுவேன் என்று எதிர்பார்க்காதீங்க. ஏனென்றால், அது என்னால் முடியாது என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries