த்ரிஷா இல்லனா நயன்தாராவுல இப்போ மனிஷாவும் சேர்ந்தாச்சு

daec6e1c-fc85-4a67-b034-a39ed3f6f580_S_secvpfஇசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக அவதாரமெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது நடித்து வரும் புதிய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இன்னொரு நாயகியாக மனிஷா யாதவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மனிஷா யாதவ், தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஜன்னலோரம்’, ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் மனிஷா யாதவ் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ஏற்கெனவே நடிகை சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சிம்ரன் நடிக்கும் காட்சிகளை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப் போவதாக தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries