என்னை செக்ஸ் பட நடிகை என்பதா? ராதிகா ஆப்தே வருத்தம்

d930abc2-b47c-4304-a0ce-4024c8964efa_S_secvpfகார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே பிரகாஷ் ராஜுடன் தோனி மற்றும் வெற்றிச்செல்வன் படங்களிலும் நடித்துள்ளார்.

ராதிகா ஆப்தேவின் நிர்வாண செல்பி படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் இப்படங்கள் பரவியது.

இந்தியில் ராதிகா ஆப்தே நடித்த பத்லாபூர் படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் செக்ஸ் காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருந்தன. இந்த படத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து ஹாலிவுட் படமொன்றில் அரை நிர்வாண காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலாடை இல்லாமல் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். கதைக்கு தேவைப்பட்டதால், அப்படி நடித்தேன் என்று அவர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து ராதிகா ஆப்தேக்கு ஆபாச கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. ஆடையை குறைத்து கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றும் அரை நிர்வாணமாக வந்தால் சந்தோஷம் என்றும் இயக்குனர்கள் வற்புறுத்துகின்றனர்.

இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறும் போது, நிர்வாண செல்பி படத்தில் நான் இருப்பது போன்ற படங்களை வெளிவந்தன. அதில் இருப்பது நான் இல்லை என்று மறுத்தேன். தற்போது ஹாலிவுட் படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததால் ஆபாசமாக நடிக்க பல இயக்குனர்கள் அழைப்பு விடுக்கின்றனர். என்னை ஆபாச பட நடிகை என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இது வருத்தம் அளிக்கிறது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries