சவுகார்பேட்டையில் ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி ரொமான்ஸ்

e6425a38-ad0f-4546-89ee-6ecb3a466b63_S_secvpfராய் லட்சுமி நடிப்பில் ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இரண்டு படங்களும் திகில் நிறைந்த படங்களாக அவருக்கு அமைந்திருந்தது. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் வெளிநாடுகளில் ஜாலியாக பொழுதை கழித்து வரும் ராய் லட்சுமி, அடுத்ததாக ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ‘சவுகார்பேட்டை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை வடிவுடையான் இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே, கரண் நடிப்பில் வெளிவந்த ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற படத்தை இயக்கியவர்.

‘சவுகார்பேட்டை’ படம் சென்னையில் உள்ள சவுகார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கவுள்ளனர். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும் உள்ளனர்.

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘நம்பியார்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries