அஜித், விஜய் பாணியை பின்பற்றும் தனுஷ்

aa94b863-0596-4748-9be1-2765dd9f7459_S_secvpfஅஜீத் தனது ஒவ்வொரு படத்திலும் படப்பிடிப்பு இறுதி நாளில் படக்குழுவினர் எல்லோருக்கும் சொந்த செலவில் பிரியாணி விருந்து கொடுப்பது வழக்கம். இதுபோல் விஜய்யும் படப்பிடிப்பு கடைசி நாளில் பிரியாணி விருந்து கொடுத்து வருகிறார். பண்டிகைகளிலும் இதுபோல் விருந்து கொடுப்பது உண்டு.

இதை தனுசும் தற்போது பின்பற்ற துவங்கியுள்ளார். அவர் தற்போது ‘மாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்குகிறார்.

நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சேரியில் வசிக்கும் இளைஞன் கேரக்டரில் தனுஷ் வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து தூத்துக்குடியில் முடிவடைந்தது.

இதையடுத்து படக்குழுவினருக்கு தனுஷ் பிரியாணி விருந்து கொடுத்தார். பந்தல் போட்டு சமையல்காரர்களை வைத்து ருசியான பிரியாணி உணவு சமைத்து அதை தனது கைப்பட படக்குழுவினருக்கு பரிமாறினார்.

பின்னர் படக்குழுவினரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அடுத்த மாதம் (ஏப்ரல்) இப்படம் ரிலீசாகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries