கள்ளப்படத்திலும் மிஷ்கினின் மஞ்சள் காமாலை உண்டாம்

1419317293-5016மிஷ்கினின் நீண்டநாள் உதவி இயக்குனர் வடிவேல் இயக்கி நடித்துள்ள படம், கள்ளப்படம். ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள இரு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது.

சித்திரம் பேசுதடியில் மாளவிகா மஞ்சள் சேலைகட்டி ஆடிய, வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் சூப்பர்ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததே.

சித்திரம் பேசுதடி ஓடாமல் முடங்கிப் போக, அந்தப் பாடலை விளம்பரப்படுத்திதான் இரண்டாவது ரிலீஸில் படம் பிக்கப்பாகி மிஷ்கினை ஊர் உலகத்துக்கு தெரியப்படுத்தியது.

அதன் பிறகு அஞ்சாதே, யுத்தம் செய் படங்களிலும் அதேபோன்று கானா பாடலை வைத்தார். காஸ்ட்யூம் அதே மஞ்சள் சேலை.

கள்ளப்படத்திலும் அதேபோல் ஒரு பாடல் இடம்பெறுகிறது. மிஷ்கினின் அதே மஞ்சள் சேலைதான் இதிலும்.

மிஷ்கின் இனி பாடல் காட்சிகளை படத்தில் வைக்கப் போவதில்லை என்று கூறியிருப்பதால், அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரையே குறிப்பிட்ட கானா பாடலை எழுதும்படி கேட்டு பாடவும் வைத்துள்ளனர்.

வெள்ளக்கார ராணி எனத் தொடங்கும் அந்தப் பாடல், என்னுடைய குருவுக்கு எனது மரியாதை என வடிவேல் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries