அனிமேஷன் படத்தை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா?

d9e4f354-b780-4088-8a86-ad41c367be15_S_secvpfநீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இசை’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆன எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் நடித்து இயக்கியது மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இசை படத்தில் இவருடைய இசை அனைவராலும் அதிகம் பேசப்பட்டது.

இப்படத்தையடுத்து எஸ்.ஜே.சூர்யா புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை அனிமேஷன் படமாக இயக்க இருக்கிறாராம். இது மற்ற அனிமேஷன் படங்கள் போல் இல்லாமல் ஆல்வின் ஆண்ட் த சிப்மங்க் என்ற ஆங்கிலப் படம் பாணியில் இயக்க இருக்கிறாராம். ஆல்வின் ஆண்ட் த சிப்மங்க் என்ற ஆங்கிலப் படம் அணில் குட்டிகள் சாதாரண மனிதர்களுடன் பேசும் வகையில் படமாக்கப்பட்டது.

இந்த பாணி எஸ்.ஜே.சூர்யாவிற்கு புதியதல்ல. இவர் ஏற்கனவே இயக்கிய ‘நியூ’ படத்தில் இந்த பாணியை வைத்து அதில் காட்சியமைத்திருக்கிறார். புதியதாக இயக்க இருக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கும் இவரே இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries