திருமணம் செய்வதற்காக ஒல்லியாக மாட்டேன்: அனுஷ்கா திட்டவட்டம்

f304aad0-4447-43bc-82d4-fe218ea8d6b9_S_secvpf‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் உருவாகிறது.

இப்படத்தை பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே.எஸ்.பிரகாஷ் இயக்குகிறார். நகைச்சுவை கலந்த படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தின் தொடக்கவிழா இன்று பூஜையுடன் ஆரம்பித்தது. இந்த விழா சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடந்தது. இதில் நடிகர் ஆர்யா, நடிகை அனுஷ்கா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஞானவேல்ராஜா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அனுஷ்கா கூறும்போது, இந்த படத்திற்காக நான் எந்தவித உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பி.வி.பி. சினிமா நிறுவனம் தயாரிப்பில் ஏற்கெனவே நடித்திருக்கிறேன். அதேபோல், ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நான் திருமணம் செய்துகொள்வதற்காக ஒல்லியாக மாற முயற்சிக்கமாட்டேன். சந்தோஷமாக இருப்பதே திருமண வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நீண்ட இடைவெளிக்கு கமர்ஷியல் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries