தமிழ் படத்தை முடித்து இந்திக்கு செல்லும் அரவிந்த் சாமி

c60d35f1-8b06-4091-b5dd-b53158703ca9_S_secvpf‘தளபதி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இப்படத்தையடுத்து ‘ரோஜா’ படத்தில் நாயகனாக நடித்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இதையடுத்து இவர் நடித்த ‘பம்பாய்’, ‘இந்திரா’ படங்கள் இவரை முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர், நீண்ட நாட்களாக சினிமாவில் நடிப்பதை குறைத்து வந்தார். பின்னர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் ரீஎன்ட்ரியானார். இதை தொடர்ந்து ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி-நயன்தாரா இணைந்து நடித்து வரும் ‘தனி ஒருவன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

தற்போது தனி ஒருவன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இதையடுத்து அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டதாகவும், இயக்குனர் ராஜா, ஜெயம் ரவி, நயன்தாரா, நாசர், வம்சி, தம்பி ராமையா ஆகிய இவர்களுடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்து என்றும் கூறினார்.

மேலும் தன்னுடைய அடுத்தப் படமான ‘டியர் டாட்’ என்னும் இந்திப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries