பிரகாஷ்ராஜூடன் தோனி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ‘ராதிகா ஆப்தே’. ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். இந்தி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் பரவின. படுக்கை அறையில் ஆடை இல்லாமல் இருப்பது போன்று இந்த படங்கள் இருந்தது. ஆபாச படத்தில் இருப்பது நான் இல்லை என்று ராதிகா ஆப்தே தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:–
நம் சமூகத்தில் ‘செக்ஸ்’ தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவும் வாழ்வுக்கு முக்கியமானது தான். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சாப்பாடு எப்படி அவசியமோ அது போல் செக்ஸும் அவசியம்.
செக்ஸ் உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளும். செக்ஸ் நல்லதா, கெட்டதா என்ற கேள்விகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு விடை தேடுவதும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.