பாண்டியராஜன் வில்லனாக நடிக்கும் சாலையோரம்

1143a880-ff13-41fa-93a3-95de415e329d_S_secvpfமிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தையடுத்து காமெடியில் கவனம் செலுத்தி வந்த பாண்டியராஜன், தற்போது மீண்டும் வில்லனாக சாலையோரம் படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.மூர்த்தி கண்ணன் திரைக்கதை எழுதி இயக்கி வரும் சாலையோரம் படத்தில் ராஜ் கதாநாயகனாகவும், செரீனா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். சிங்கம் புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

துப்புரவு தொழிலாளிக்கும் மருத்துவம் படிக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. படத்தைப் பற்றி இயக்குனர் மூர்த்தி கண்ணன் கூறும்போது,

“சாலையோரம் படத்தில் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையை படம் பிடித்துள்ளேன். குப்பை லாரி முன்னால் போனால் நாம் மூக்கை பிடிக்கிறோம். நாங்கள் குப்பைகள் இருக்கும் குப்பை கிடங்கில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இந்த இடத்தில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலைகள் செய்தார்கள்.

படப்பிடிப்பின் போது நடிகை செரீனாவுக்கு வாந்தி ஏற்பட்டது. பின்னர் டாக்டரை வரவழைத்து சிகிச்சைக்குப்பின் மீண்டும் குப்பை கிடங்கில் நடித்தார். சிங்கம்புலிக்கு இந்த குப்பை கிடங்கில் மேல் நின்று நடனம் ஆடுவது போல் காட்சி அமைத்தோம். அதை அவர் மிகவும் கஷ்டப்பட்டு சிறப்பாக நடித்தார்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries