ரஜினி முருகனின் பர்ஸ்ட் லுக், ஆடியோ மற்றும் பட ரிலீஸ் தேதிகள்

sivakarthikeyan Rajini Murugan Movie Shooting Spot Photos (3)விநியோகஸ்தர்கள். திரையரங்கு உரிமையாளர்களின் திடீர் செல்லமாகியிருக்கிறார், சிவ கார்த்திகேயன்.

எவ்வளவு மொக்க கதையா இருந்தாலும், நீங்க நடிச்சா நாங்க பார்ப்போம் என்று ரசிகர்கள் யாரை சொல்கிறார்களோ, அவர்கள்தான் திரையரங்கு உரிமையாளர்களின், விநியோகஸ்தர்களின் விருப்பத்துக்குரியவராக முடியும்.

இந்தப் பட்டியலில் ரஜினி, விஜய், அஜீத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் சிவ கார்த்திகேயன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ரஜினி முருகன் படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு. படத்தின் தமிழக விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 25 வெளியிடுகின்றனர். பாடல்கள் வெளிவருவது ஜுன் 7 -ஆம் தேதி. ஜுலை 17 ரம்ஜானுக்கு படத்தை வெளியிடுவதாக திட்டம்.

டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries