தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

9c69e42f-80d7-46aa-bb7f-e98dd4cfabc1_S_secvpfதனுஷ் நடிப்பில் இந்த வருடம் ‘ஷமிதாப்’, ‘அனேகன்’ ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் சேரி தலைவனாகவும் முறுக்கு மீசை, குறுந்தாடியுடன் நடித்து வந்தார்.

தற்போது தாடி, மீசைக்கு விடைக்கொடுத்து விட்டு ‘துள்ளுவதோ இளமை’ பாணியில் இளைஞனாக அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் தனுஷ். ‘வேலையில்லா பட்டதாரி’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தில் தனுஷ் நாயகனாவும், எமி ஜாக்சன், சமந்தா நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். வேல்ராஜ் இயக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ கூட்டணி இணைந்திருப்பதால் இப்படம் ‘வேலையில்லா பட்டதாரி பாகம் 2’ என்றும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries