பிசாசு கைவிட்டது, ஆண்டவனாவது காப்பாற்றுவாரா?

1426929441-1933முதல் படமே மிஷ்கின் இயக்கும் படம். தயாரிப்பது பாலா. ஆஹா, அடித்தது அதிர்ஷ்டம் என்றுதான் பிசாசு படத்தில் நடித்தார் பிரயாகா.

படம் வெளியான பிறகுதான் அடித்தது அதிர்ஷ்டமில்லை, பிசாசு என்பது அவருக்கு தெரிய வந்தது. ஒரேயொரு காட்சியில் மட்டும் முகத்தை காட்டி நடித்ததால் யாருக்குமே பிரயாகாவை தெரியவில்லை.

படம் முழுக்க இவருக்கு மிஷ்கின் போட்டுவிட்டது பேய் மேக்கப், எப்படி தெரியும்?நல்லவேளையாக அந்த பேய் மேக்கப்புக்கு நடுவிலும் பிரயாகா என்ற நடிகையை அடையாளம் கண்டுகொண்டார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

அவர் இயக்கும், போடா ஆண்டவனே என் பக்கம் படத்தில் பிரயாகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார்.

பிசாசால் கைவிடப்பட்டவரை ஆண்டவனாவது கரை சேர்ப்பாரா?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries