பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடுவதா?: கானா பாலா மீது பேரரசு பாய்ச்சல்

e23644f4-0a46-455e-beae-d738943d295c_S_secvpfதிரைப்படங்களில் கானா பாடல்களை பாடி வருகிறார் ‘கானா பாலா’. படத்தில் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு ஆடும் காட்சிகளிலும், காதல் சோகத்தில் குத்தாட்டம் ஆடும் காட்சிகளிலும் இவர் பாடல்கள் இடம் பெறுகின்றன. ஆண்களை ஏமாற்றும் பெண்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது போன்று இவரது பாடல் வரிகள் இருக்கின்றன.

இதற்கு டைரக்டர் பேரரசு கண்டனம் தெரிவித்து உள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பாடுவதை பாலா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து பேரரசு கூறியதாவது:–

கானா பாலாவின் பாடல்கள் பெண்களை அவமதிக்கும் விதத்திலேயே உள்ளன. காதலித்து ஏமாற்றுபவர்கள் பெண்கள்தான். கணவன்மார்களை பெண்கள் ஏமாற்றுகிறார்கள்.

குடும்ப பெண்களும் கணவனுக்கு மோசம் செய்கிறார்கள் என்பதுபோல் பாடல்களை எழுதி பெண் குலத்தை கானா பாலா வசை பாடி வருகிறார். இனிமேல் இது மாதிரி பாட்டு எழுதுவதை பொறுத்து கொள்ள முடியாது.

கானா பாலா மேல் பெண்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இனிமேல் இதுபோல் அவர் பாடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து கானா பாலா கூறும்போது, ‘‘டைரக்டர்கள்தான் அதுபோன்ற பாடல்களை எழுதும்படி என்னை நிர்ப்பந்திக்கிறார்கள். மற்றபடி பெண்கள் மேல் நான் நிறைய மதிப்பு வைத்து இருக்கிறேன்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries