கிராபிக்ஸ் இல்லாமல் திகில் படமாக உருவாகும் யூகன்

bd5e732d-3fab-42fa-a7e0-6677ecdfcd7a_S_secvpfஐ.டி. கம்பெனியில் நடைபெறும் பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் படம் யுகன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக யாஸ்மித், சித்து, ஷாம் கீர்த்திவாசன், பிரதீப் பாலாஜி, சாக்‌ஷி அகர்வால், ஆயிஷா, தருண் சக்ரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் ஆகிய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குனர் கமல் குமார் இயக்கியிருக்கிறார். இவரே இப்படத்தை தயாரித்தும் எடிட்டிங்கும் செய்திருக்கிறார்.

ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் 5 பேர்களின் எண்ணங்களை நகைச்சுவை கலந்து திகில் மற்றும் பல திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் சிறப்பம்சமாக கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் கேமரா தந்திரம் மற்றும் ஒப்பனைகள் மூலமாக திகில் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி கமல் குமார் கூறும்போது, “இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் புதுசா இருக்கணும் என்பதற்காக புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளேன். இப்படத்தின் ஒளிப்பதிவை ரவி அறுமுகம் செய்திருக்கிறார். ரஷான்ந் அரவிந்த் இசையில் 3 பாடல்கள் உருவாகியிருக்கின்றன.

அலெக்ஸ் பிரமானந்த் படத்தின் திகில் காட்சிக்கான பணியை செய்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் திகில் காட்சிகள் அதிகம் பேசப்படும். இதற்காக ஒன்றரை மாதம் மிகவும் கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்.

இப்படத்தின் நாயகி சாக்‌ஷி அகர்வால், பாதி நேரம் ஐ.டி பெண்ணாகவும், மீதி நேரம் பேயாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி வரை ஹீரோ யார் என்றே தெரியாது. நான் இப்படத்திற்கு எடிட்டிங்கும் செய்திருக்கிறேன்.

இது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். இப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அபிராமி ராமநாதன் இப்படத்தை வெளியிடுகிறார்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries