சிம்புவை வைத்து இயக்கும் கிருத்திகா: அனிருத் இசை

8305928a-c756-4f71-8f74-ccdb7ce5f4df_S_secvpfசிம்பு நடிப்பில் கடந்து மூன்று வருடங்களாக எந்தப்படமும் வெளியாகவில்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இதைத்தவிர தற்போது கௌதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கவிருக்கும் புதுபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகையிடம் பேசி வருகிறார்களாம். இப்படத்தை அழகான காதல், ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் கலந்த கமர்சியல் படமாக உருவாக்க இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். கிருத்திகா இயக்கிய ‘வணக்கம் சென்னை’ படத்திற்கும் அனிருத்தான் இசையமைத்திருந்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries