சென்னையில் டூயட் பாடும் ஆர்யா, தமன்னா

1427341789-8209ராஜேஷ் இயக்கத்தில், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் ஆர்யா, தமன்னா நடித்து வருகின்றனர். முக்கியமான வேடத்தில் சந்தானம். படத்தில் ஆர்யா வாசுவாகவும், சந்தானம் சரவணனாகவும் வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பை முடித்து படக்குழு சென்னை திரும்புகிறது. சென்னையில் இரு பாடல் காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries