உதயநிதி படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்த சந்தானம்

9b863068-dddd-48e2-8b3c-f29187b8d3b3_S_secvpfஉதயநிதி நடிப்பில் வெளிவந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களில் சந்தானம் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த படங்களில் எல்லாம் உதயநிதியை விட சந்தானத்துக்கே அதிக முக்கியத்துவம் இருந்தது. மேலும், சந்தானத்தின் காமெடிக்காக இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது உதயநிதி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நண்பேன்டா’ படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். முந்தைய படங்களில் படம் முழுக்க ஹீரோவுடனேயே பயணிக்கும் சந்தானம், இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில்தான் நடிக்கிறாராம். இதற்காக குறைந்தது 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாராம்.

படத்தின் படப்பிடிப்பே 95 நாட்கள்தான் நடைபெற்றுள்ளது. இதுவரை சந்தானம் நடித்த படங்களுக்கு இத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்தது கிடையாதாம். இதற்கு காரணம் உதயநிதியுடனான நட்புதான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தானத்துக்கும்-உதயநிதிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால், உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால், அதனை உதயநிதி தற்போது மறுத்துள்ளார். மேலும், சந்தானத்துடன் நட்புடன் பழகி வருவதாகவும் உதயநிதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries