காமெடி நடிகர் வடிவேலு ஏற்கனவே ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’, ‘தெனாலி ராமன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது ‘எலி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நடிகை சதாவும் நடிக்கிறார். விக்ரம், மாதவன், விஷால், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி கதாநயாகர்களுடன் சதா நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். வடிவேலுடன் அவர் நடிப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வடிவேலு, சதா நடித்த நடன காட்சியொன்றை இன்று சென்னை பின்னி மில்லில் படமாக்கினார். ஏராளமான டான்சர்களுடன் வடிவேலு, சதா ஜோடியாக ஆட இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பெரிய செட் போட்டு இதை எடுத்தனர். டான்ஸ் மாஸ்டர் தாரா நடனம் அமைத்தார்.