புதுப்படங்களில் நடிக்க சுருதிஹாசனுக்கு கோர்ட்டு தடை

777427b6-77fd-451b-bad6-900c64788528_S_secvpfசுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். இவர் விஜய் ஜோடியாக நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும், அஜித் நடிக்கும் அடுத்த படத்துக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் கார்த்தி, நாகார்ஜூனா நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகும் புதுபடத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்து இருந்தனர். வம்சி இப்படத்தை இயக்குவதாகவும் பி.வி.பி. சினிமா பட நிறுவனம் இதை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் பட பூஜையும் நடந்தது.

இந்த நிலையில் சுருதிஹாசன் திடீரென இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். சுருதிஹாசன் மீது பி.வி.பி. சினிமா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கார்த்தி, நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் நடிக்க சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்தோம். பாதி படம் முடிவடைந்த நிலையில் தன்னால் இப்படத்துக்கு கொடுக்க தேதி இல்லை. அதனால் தன்னால் நடிக்க இயலாது என்று சுருதிஹாசன் மின் அஞ்சல் அனுப்பி உள்ளார்.

இதனால் எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகி விட்டது. சுருதிஹாசன் செயலால் எங்களுக்கு பண இழப்பு மட்டுமன்றி எங்கள் நிறுவனத்துக்கு உண்டான நன்மதிப்பும் விணாகிவிட்டது. இதனால் எங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த தீர்ப்பு வரும் வரை எந்த நிறுவனமும் சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என உத்தரவிட்டு உள்ளார். இந்த குற்றத்துக்காக சுருதிஹாசனிடம் விசாரணை நடத்தும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries