என்றும் நான் கமல் ரசிகை: கவுதமி

a8424e31-c787-4fa6-9faf-4735fdf6872a_S_secvpfகமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படம் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது. படத்தின் தெலுங்கு பட பாடல் கேசட் வெளியிட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.

விழாவில் கமலஹாசன், படத்தின் கதாநாயகிகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஸ்ரீராம், தெலுங்கு பட விநியோகஸ்தர் கல்யாண், கமல் மகள் சுருதி ஹாசன், கவுதமி மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசியதாவது:–

கமலும், நானும் வேறு அல்ல. என்னை அண்ணா என்று அழைக்கும் மனம் ஒன்றிய நண்பர்களில் அவரும் ஒருவர். நானும் அவரை தம்பி என்றே அழைக்கிறேன். கமலஹாசனின் 120 படங்களுக்கு தெலுங்கில் நான் டப்பிங் செய்து உள்ளேன்.

கமல் ஒரு அற்புதமான கலைஞர். அவருக்கு தெரியாத வித்தை எதுவும் இல்லை. அவரிடமும், இயக்குனர் பாலச்சந்தரிடமும் கற்று தெரிய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.

ஒரு முறை நான் பாலச்சந்தரை அணுகி உங்கள் படத்தில் ஒருவாரம் உதவி டைரக்டராக வேலை செய்ய அனுமதி கேட்டேன். அதற்கு அவர் என்னை அன்போடு கடிந்து கொண்டார்.

இப்போது உத்தமவில்லன் படத்தில் நடித்ததன் மூலம் பாலசந்தருடன் ஒரு சில நாட்கள் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

இது என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று. கமலஹாசன் சாகர சங்கமம், சுவாதி முத்யம் படத்துக்கு பிறகு தெலுங்கில் நடிக்கவில்லை. இந்த உத்தமவில்லன் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் கமலஹாசன் பேசும் போது ‘‘இயக்குனர் கே.விசுவநாத் இயக்கத்தில் சாகர சங்கமம், சுவாதி முத்யம் படத்தில் நடித்தேன். அவரது இயக்கத்தில் நடிக்கும் எந்த நடிகரும் என்னை போல் வருவார்கள்.

எனது குரு பாலச்சந்தருக்காக நான் எழுதிய தமிழ் கவிதையை தெலுங்கில் மொழி பெயர்க்கும் வகையில் நான் திறமையானவன் அல்ல. அதை தெலுங்கில் மொழி பெயர்த்த ராம ஜோசய்யா சாஸ்திரிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகை கவுதமி பேசியதாவது:– நான் எத்தனையோ படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளேன். வாழ்க்கையில் எத்தனையோ கட்டங்களை தாண்டி வந்து உள்ளேன். எனது அபிமான நடிகர் கமலஹாசன் தான். அன்றும், இன்றும் என்றும் நான் அவரது ரசிகை.

இவ்வாறு கவுதமி பேசினார்.

சுருதி ஹாசன் பேசும் போது, நான் இந்த படத்தை பார்த்தேன். மிக சிறந்த படங்களில் ஒன்றாக இது அமையும் என்றார். இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேசும் போது, ‘‘கமல் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக அமையும்’’ என்றார்.

விழாவில் நடிகர் கமலஹாசனும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து கமல் நடித்த தமிழ், தெலுங்கு, இந்தி பட பாடல்களில் சிலவற்றை பாடினார்கள். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries