யு சான்றிதழ் பெற்றும் நண்பேன்டாவுக்கு வரிவிலக்கு இல்லை

1419594441-445உதயநிதி, நயன்தாரா நடித்துள்ள நண்பேன்டா ஏப்ரல் 2- ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் அளித்தது. எனினும் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என மறுத்துள்ளனர்.

இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய உதயநிதி,

நண்பேன்டா படத்தை தமிழக அரசின் வரி விலக்கு குழுவினருக்கு காட்டினோம். படத்தை பார்த்து விட்டு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே என் படத்துக்கு வரி விலக்கு அளிக்க மறுத்த குழுவினரே இந்தப் படத்தையும் பார்த்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்.

தற்போது ‘நண்பேன்டா’ படத்துக்கும் வரி விலக்கு அளிக்காததை எதிர்த்து 6 பேர் மீதும் வருகிற 30–ந்தேதி கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online