விக்ராந்துக்காக ஆட்டம் போட்ட விஷால்-ஆர்யா-விஷ்ணு

c0fbd859-a90f-4cef-8b1d-d8dc482f84ae_S_secvpfவிக்ராந்த்-விஷால்-ஆர்யா-விஷ்ணு என நான்கு பேரும் தமிழ் சினிமாவில் நல்ல நண்பர்களாக பழகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நட்பு அடிப்படையில் விஷால் தயாரித்து, நடித்திருந்த பாண்டியநாடு படத்தில் விக்ராந்துக்கு தனக்கு சமமான கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்தார் விஷால்.

அதேபோல், விஷ்ணு நடிப்பில் வெளிவந்த ‘ஜீவா’ படத்தை ஆர்யாவும்-விஷாலும் இணைந்து வெளியிட்டார்கள். இவ்வாறு தங்கள் நட்பை பலப்படுத்தி வரும் நால்வரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்கள்.

விக்ராந்த் நடித்துவரும் ‘பிறவி’ படத்திற்காக நான்கு பேரும் இணைந்து ‘தாக்க தாக்க’ என்ற அறிமுக பாடலுக்காக நடனமாடியிருக்கிறார்கள். இந்த பாடலை சென்னையில் உள்ள பின்னி மில்லில் படமாக்கி உள்ளனர்.

பிறவி படத்தில் விக்ராந்துடன், அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், லீமா, அபிநயா, பார்வதி நிர்பன், அருள்தாஸ், சரித்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். சஞ்சீவ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பது இப்படத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries