மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் நவரச திலகம்

1427795921-7064சிவ கார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் காம்பியர்கள் ஒவ்வொன்றாக சினிமாவுக்குள் நுழைகிறார்கள். சிவ கார்த்திகேயனைப் போல இருக்கும் மா.கா.பா.ஆனந்துக்கு நாயகனாக இரண்டு படங்கள் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று, நவரச திலகம்.

பர்மா படத்தை தயாரித்த ஸ்டோன் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மா.கா.பா.ஆனந்துடன் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும், கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர். ராஜ்கபூர், பூபதி பாண்டியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த காம்ரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

காமெடி கலந்த பேமிலி என்டர்டெய்ன்மெண்ட் என தனது படத்தை வரையறுத்துள்ளார், காம்ரன். பொள்ளாச்சியில் படத்தின் 60 சதவீத காட்சிகளை படமாக்கியுள்ளனர். அடுத்து திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries