அருண் விஜய்யின் வா டீல் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

87ee2030-9f62-4242-85c7-786d356c137c_S_secvpfநீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் அருண் விஜய். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய்யின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இது அவருக்கு பேர் சொல்லும் படமாகவும் அமைந்தது.

இப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே ‘வா டீல்’ என்னும் படத்தில் அருண் விஜய் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட உள்ளனர். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நடித்திருக்கிறார். மேலும் வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை சிவஞானம் இயக்கியுள்ளார்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries