உண்மைச் சம்பவத்தை பிரதிபலிக்கும் நெருக்கம் விரைவில் ரிலீஸ்

66b18e4f-7901-4b6e-a9c4-cfa459c93f7f_S_secvpfமிக நெருக்கமான அன்போடு அமைதியாக வாழ்ந்து வரும் தம்பதிகளின் வாழ்க்கையில் ஒரு சமயத்தில் அந்த நெருக்கமே எப்படி விளையாடுகிறது என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தின் பாதிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் படம்தான் நெருக்கம்.

இப்படத்தில் கதாநாயகனாக அஸ்வினி கார்த்திக் நடிக்கிறார். கதாநாயகிகளாக விதர்ஷா, சனா நடிக்கிறார்கள்.

சசி இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் கடைசி காட்சி வரை ஒரு திரில் இருப்பதுடன் காதலுடன் கூடிய நகைச்சுவையும் கலந்து பொழுதுபோக்கு நிறைந்த படமாகவும் இயக்கியிருக்கிறார்.

குற்றங்கள் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அதை எதிர்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும் இப்படம் உருவாகியிருக்கிறது.

முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழக கேரள எல்லைப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online