’திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதை ஏற்க முடியாது’ – தீபிகாவிற்கு சோனாக்‌ஷி பதில்

1428062540-62பெண்கள் நினைத்தபடி எல்லாம் நடந்து கொள்ள முடியாது என்று தீபிகா படுகோனேவின் வீடியோவிற்கு சோனாக்‌ஷி சின்ஹா பதில் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியப் பெண்கள் தங்களின் ஆடை, திருமண வாழ்க்கை, தனித்து இருப்பது அல்லது லெஸ்பியனாக இருப்பது ஆகியவற்றில் சுந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள குறும்படம் பரபரப்பை ஏற்படுத்தியது.

”மை சாய்ஸ்’ என்ற இந்தப் படத்தை காக்டெய்ல் மற்றும் பென்னி நிறுவனம் தயாரித்திருந்தது. ஹோமி அடஜனியா என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தக் குறும்படத்தில் 29 வயது நடிகை தீபிகா படுகோனே கூண்டில் அடைபட்ட எண்ணங்களை விடுமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை உண்டாக்கியிருந்தார்.

இந்நிலையில், தற்போது சோனாக்‌ஷி சின்ஹா பெண்கள் நினைத்தபடியெல்லாம் நடந்து கொள்ள முடியாது கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது ‘‘நான் அந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் பெண்களுக்கு எந்த வகையிலான அதிகாரம் வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

பெண்கள் எப்போதும் தாங்கள் நினைத்த உடையை அணிய முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்ளவும் முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்வதும், திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதும் பெண்களின் முன்னேற்றத்துக்கானது என்று சொல்வதையும் ஏற்க முடியாது.

இவையெல்லாம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை, வலிமை போன்ற விஷயங்களை கொடுக்காது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அந்த பெண்களை மேலே கொண்டு வருவதுதான் சுதந்திரம். அந்த சுதந்திரம் அதிகமான பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries