என் உடல்நிலை பற்றி வதந்திகள்: நடிகர் பாலாஜி விளக்கம்

ef340950-9648-4905-95cc-ef44f3717331_S_secvpfதாடி பாலாஜி ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானார். சினிமா படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

நேற்று லட்சுமி, துளசி, பயணம், உறவுகள், செல்வி, ரோஜா உள்ளிட்ட டி.வி. தொடர்களை இயக்கிய பாலாஜி என்பவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் அவர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் இணைய தளங்களில் டி.வி. டைரக்டர் பாலாஜிக்கு பதில் தாடி பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் பரவின.

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்களிலும் இவை பரவின. தாடி பாலாஜி படத்தை போட்டு இச்செய்தியை வெளியிட்டார்கள். நிறைய பேர் அனுதாபங்களும் தெரிவித்தனர். பலர் தாடி பாலாஜி வீட்டுக்கு போன் செய்து இரங்கலும் தெரிவித்தனர். இது பற்றிய தகவல் தெரிந்ததும் தாடி பாலாஜி அதிர்ச்சியானார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:–

என் உடல் நிலை பற்றி வதந்திகள் பரவி உள்ளன. தேசிய விருது, ஆஸ்கார் விருது, தமிழக அரசு உள்ளிட்ட பல விருதுகளை பெறவும் அதே மாதிரி கமல், ரஜினி, அஜீத், விஜய், தனுஷ் போன்றோருடன் நடிப்பதற்கு கால்சீட் கொடுக்கவும் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, எமன் எனக்கு கால்சீட் கொடுத்து விடுவானா கொடுக்கவே மாட்டான்.

உங்கள் ஆசிர்வாதத்தால் நல்லாவே இருப்பேன். இன்று என் உடல் நிலை பற்றி இப்படி ஒரு விஷயம் பரவி இருக்கிறது. பங்குனி உத்திரத்தில் எப்போதுமே இதுமாதிரி வதந்தி வந்தால் நூறு ஆயுசு என்று சொல்வார்கள், நன்றி.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries