ஜோதிகா படத்தின் ஆடியோ நாளை வெளியீடு: சூர்யா-ஜோதிகா பங்கேற்பு

36-Vayadhinile-Movie-Stills-1கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடித்து வரும் புதிய படம் ‘36 வயதினிலே’. இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். மலையாள படத்தை இயக்கிய ரோஜன் ஆண்ட்ரூஸ் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை நாளை (ஏப்ரல் 6) வெளியிடப்போவதாக சூர்யா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 8 வருடத்திற்கு பிறகு ஜோதியாக மீண்டும் வெள்ளித்திரைக்கு வர்றாங்க. என்னுடைய 2டி எண்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்புல உருவாகியிருக்கிற 36 வயதினிலே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வருகிற ஏப்ரல் 6-ந் தேதி காலை 10 மணிக்கு ஹோட்டல் லீலா பேலசில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இவ்விழாவில் சூர்யா கலந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘வாடி ராசாத்தி’ என்ற பாடல் ரிலீசாகி பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online