லாரன்ஸின் காஞ்சனா-2, ஏப்ரல் 16ம் தேதி ரிலீஸ்

16933245-d3cd-4b3a-94ca-28961dc099f4_S_secvpfலாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கிய முனி படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் எடுத்தார். அதுவும் வெற்றிகரமாக ஓடியதால் இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தார். இதற்கு முனி 3 கங்கா என முதலில் பெயரிடப்பட்டது.

இதன் பெயரிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் தலைப்பை காஞ்சனா-2 மாற்றியிருக்கிறார்கள்.

காஞ்சனா படத்திற்கும் காஞ்சனா- 2 படத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்றும் முற்றிலும் மாறுபட்ட கதை என்றும் ராகவா லாரன்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் நான்கு நாட்களில் இப்பணிகள் முடிவடையவுள்ளது. இதையடுத்து இப்படத்தை ஏப்ரல் 16ம் தேதி வெளியிடவுள்ளனர்.

அதிக பொருட்செலவில் திகில் படமாக தயாராகியுள்ள இப்படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வழங்க, உலகம் முழுவதும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

லாரன்ஸ் நாயகனாகவும், நாயகிகளாக டாப்ஸி, நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online