தன்னுடன் ஜோடி போட்ட ஹீரோயினுடன் மீண்டும் நடிக்க விரும்பாத விஷால்

d22b616f-d996-415d-81c0-00950d02896c_S_secvpfசமீப காலமாக விஷால் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. இதில் முன்னணி நடிகைகளுடன் விஷால் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் அதிகம் வரவேற்பு பெற்றது.

ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ‘பூஜை’, ஹன்சிகாவுடன் இணைந்து ‘ஆம்பள’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இப்படத்தையடுத்து லிங்குசாமி இயக்கும் சண்டைக்கோழி 2ம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக எமி ஜாக்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதைதவிர மேலும் மூன்று முன்னணி கதாநாயகிகளிடமும் பேசி வருகிறார்களாம்.

இந்நிலையில் விஷால், தன்னுடன் ஒரு படத்தில் நடித்த நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது உள்ள ரசிகர்கள் ஒரு படத்தில் நடித்த நடிகையுடன், மறுபடியும் வேறு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் இனிமேல் முன்னணி நடிகைகள் அல்லது புதுமுக நடிகைகளுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளாராம் விஷால்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries