அஜித் பிறந்த நாளில் வெளியாகும் கமல் படம்

c93d9c72-d7aa-48c8-b4c1-16caaa0b9e1c_S_secvpfகமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் சென்சார் பணிகள் முடிவடையாததால் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தேதி குறிப்பிடாமலேயே ஒத்திவைக்கப்பட்ட இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் தொழிலாளர்கள் தினமும், அஜித் பிறந்தநாளுமான மே 1-ந் தேதி வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தேதியில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படமும், ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘புறம்போக்கு’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், நாசர், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் அமைந்துள்ள இப்பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online