தேசிய விருது பெற இருக்கும் பாபி சிம்ஹா மீது டைரக்டர் புகார்

72115da3-1feb-477e-b455-ce49f4105a9a_S_secvpfபீட்சா, சூது கவ்வும், நேரம் படங்களில் நடித்து பிரபலமானவர் பாபி சிம்ஹா. ஜிகர்தாண்டா படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

பாபி சிம்ஹா மீது ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் டைரக்டர் மருது பாண்டியன் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

புகார் குறித்து அவர் கூறியதாவது:–

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தில் பாபி சிம்ஹாவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தேன். இதுதான் அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம். 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 30 நாட்களுக்கு மேல் நடித்து கொடுத்தார். ஆரம்பத்தில் நன்றாக ஒத்துழைப்பு அளித்தார்.

ஆனால் ஜிகர்தண்டா படம் ஹிட்டானதும் அவர் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. ஐந்து நாட்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தது. அவற்றை முடித்து கொடுக்கும்படி மறுத்துவிட்டார்.

இப்போது என் நிலைமை வேறு. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் கணக்கு வழக்குகளை என்னிடம் ஒப்படையுங்கள். அந்த படத்துக்கான வசூலில் பாதியை எனக்கு தருவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.

பல மாதங்கள் காத்திருந்தோம். விஜய்சேதுபதி மூலம் சமரசமும் பேசினோம். ஆனால் நடிக்க வரவில்லை. டப்பிங் பேசவும் மறுத்து விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானோம். அவர் நடிக்காமல் விட்ட சீன்களை வேறு ஒருவரை நடிக்க வைத்து முடித்துவிட்டோம். வருகிற 10–ந்தேதி படம் ரிலீசாகிறது.

இதை குறும்படம் என்று பாபி சிம்ஹா கூறி இருப்பது தவறு. 2 மணி நேரம் 15 நிமிடம் படம் வந்துள்ளது. அவரிடம் கதை சொன்னபோதே 115 சீன்கள் விளக்கினேன்.

திரைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள் பற்றிய கதையே இப்படம். இந்த படத்தை பார்த்து டைரக்டர் பாரதிராஜா ‘நாயகன்’ படத்துக்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் என பாராட்டினார்.

டைரக்டர்கள் ராம், தியாகராஜன், குமார ராஜா, பாலாஜி, தரணிதரன் போன்றோரும் பாராட்டு தெரிவித்தனர். ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் மதுராஜ் இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries