சன்னி லியோன் படத்தில் அந்த காட்சிக்கு மட்டும் கட் கொடுத்த சென்சார் போர்டு

17700c52-a963-4f89-8757-b873cd45a872_S_secvpfசன்னி லியோன் நடிப்பில் இந்தியில் உருவாகியிருக்கும் படம் ‘ஏக் பாலி லீலா’. இப்படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கிளுகிளுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குனராக பாபி கான் இயக்கியிருக்கும் இப்படத்தில் சன்னி லியோன் மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவதற்காக சென்சார் போர்டுக்கு படத்தை போட்டுக் காண்பித்துள்ளனர். படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இருந்தாலும், படத்தில் ஹோலி பண்டிகையின் போது ஒரு பெண்ணின் மார்பில் வண்ணப் பொடி பூசுவது போன்ற ஒரு காட்சிக்கு மட்டும் கட் கொடுத்துள்ளனர்.

மற்றபடி, படத்தில் எந்தவொரு காட்சியையும் கட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, படத்தில் ரஜினிஸ் துக்கல் மற்றும் சன்னி லியோன் இணைந்து நடித்துள்ள நெருக்கமான காதல் காட்சிகளுக்கு கூட கட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அகமது கான் கூறும்போது, இந்த படத்தில் மார்பு காட்சி ஒன்றை கட் செய்துள்ளனர். அது சன்னி லியோன் காட்சி கிடையாது. இதனால் நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம். என்று கூறியுள்ளார்.

‘ஏக் பாலி லீலா’ படத்தில் ஜெய் பனுஷாலி, ராகுல் தேவ், ரஜினிஸ் துக்கல், மோஹித் அஹ்லாவாட் ஆகியோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 10-ந் தேதி இப்படம் வெளிவரவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online