லாரன்ஸின் காஞ்சனா-2 படத்திற்கு யுஏ சான்றிதழ்

9989d401-9971-45d0-8078-fcf29f1c0fc7_S_secvpfலாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கி வரும் படம் ‘காஞ்சனா 2’. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

முனி 3 கங்கா என்ற பெயரில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இறுதி கட்டத்தை நெருங்கியதும் காஞ்சனா-2 என தலைப்பை மாற்றினார்கள். இதன் படப்பிடிப்புகள் முடிந்து கிராபிக்ஸ் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்த படக்குழுவினர், கிராபிக்ஸ் பணியை முடித்து விட்டு படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பினர்.

படத்தைப் பார்த்து ஆய்வு செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 16ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வழங்க, உலகம் முழுவதும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries