காதல்-திரில்லர்-ஆன்மீகம் கலந்த கமரகட்டு

ec6dd933-71fc-40f4-95ab-40d01445e9e3_S_secvpf‘சாட்டை’ படத்தின் நாயகன் யுவன் மற்றும் ‘பசங்க’ ஸ்ரீராம் இணைந்து நடித்திருக்கும் புதிய படம் ‘கமரகட்டு’. இப்படத்தை ராம்கி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இவர் பல படங்களில் ஆர்ட் டைரக்டராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பிளஸ்-2 முடித்துவிட்டு காலேஜ் செல்லும் பருவ வயதில் இருக்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையை படமாக உருவாக்கியிருக்கிறார் ராம்கி ராமகிருஷ்ணன்.

படம் குறித்து இயக்குனர் பேசும்போது, கமரகட்டு ஆரம்பத்தில் காதல் படமாக நகரும். இடைவேளைக்கு பிறகு அமானுஷ்ய சக்தி கொண்ட திகில் படமாக மாறும். இறுதியில் ஆன்மீக படமாக முடிவடையும்.

இந்த படத்தில் தனியாக காமெடி டிராக் கிடையாது. கதையை ஒட்டியே காமெடியும் வரும். நாம் கடவுளை நேரில் பார்க்கமுடியாது. நம்மை சுற்றியிருப்பவர்கள்தான் நமக்கு கடவுள் உருவத்தில் உதவி செய்வார்கள். அதை உணரும் வகையில் இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறோம்.

கமரகட்டு சிறியதாக இருந்தாலும் இனிப்பு, புளிப்பு கலந்து ரொம்பவும் உறுதியாக இருக்கும். அதை கடிப்பது சிரமம். மீறி கடித்தால் பல் வலிக்கும். அப்படித்தான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையிலான பருவம். இந்த பருவத்தை சரியாக கையாளாமல் விட்டுவிட்டால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம்.

பள்ளி சீருடையில் காதல் செய்வதுபோல புகைப்படங்கள் வெளிவருவது வெறும் பப்ளிசிட்டிக்காக மட்டும்தானே தவிர, படத்தில் அப்படியொரு எந்த காட்சியும் வைக்கவில்லை. இந்த படத்தில் நான் சொந்த அனுபவத்தில் பார்த்து வியந்த விஷயங்களை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இப்படத்தில் நாயகனை விட நாயகிக்கே முக்கியத்துவம் இருக்கும். திருவண்ணாமலை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை ஒரு பாடலில் சொல்லியிருக்கிறோம்.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது, திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடவுளாக நினைத்து வழிபடும் ஒரு குன்றை படமாக்க எண்ணினோம்.

அந்த குன்றுக்கு அருகில் யாரும் செல்ல முடியாது என்பதால் ஹெலி கேமை வைத்து படமாக்க எண்ணினோம். ஆனால், அதை கடைசி வரை எங்களால் படமாக்க முடியவில்லை. ஏதோ ஒரு சக்திதான் எங்களை படமாக்கவிடாமல் தடுத்தது என்று நினைக்கிறேன்.

இவ்வாறு இயக்குனர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries