வரிவிலக்குடன் ஏப்.24 வெளியாகும் வை ராஜா வை

1409210937-3473 படத்தை இயக்கிய ஐஸ்வர்யாவின் இரண்டாவது படம், வை ராஜா வை ஏப்ரல் 24 திரைக்கு வருகிறது. சென்சார் படத்துக்கு யு சான்றிதழ் தந்துள்ளதால், 30 சதவீத வரிவிலக்குக்கு படம் தகுதி பெற்றுள்ளது.

வை ராஜா வை படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். தாப்ஸிக்கு முக்கியமான வேடம். டேனியல் பாலாஜி நீண்ட நாள்களுக்குப் பிறகு வில்லத்தனம் செய்திருக்கிறார். நகைச்சுவைக்கு விவேக்.

கடலில் அறிமுகமான கௌதம் கார்த்திக்குக்கு எந்தப் படமும் சரியாக அமையவில்லை. தனது திரைவாழ்க்கையின் முதல் திருப்புமுனையாக வை ராஜா வையையே நம்பியுள்ளார்.

நம்பிக்கையை படம் காப்பாற்றும் என்கிறார்கள், பட யூனிட்டை சேர்ந்தவர்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries