மீண்டும் இணையும் சூது கவ்வும் படக்குழு

251c85c2-e17f-4c75-a8f1-aca1b44732f6_S_secvpfவிஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தார். மேலும் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே படக்குழு மீண்டும் ஒரு புதுபடம் மூலம் இணையவுள்ளது. இந்த படத்திலும் விஜய் சேதுபதியே நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் கதாநாயகி தேடல் நடைபெற்று வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இதனை ரொமன்டிக் கலந்த காமெடி படமாக உருவாக்க உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் தொடர்ந்து 20 நாட்கள் படிப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இப்படத்தை திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சி.வி.குமாரும் ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜாவும் தயாரிக்க இருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online