பிரசாந்துக்கு கைப்படாத ரோஜாவை ஜோடியாக்கிய தியாகராஜன்

f0e0dd0c-4821-4fcd-9cf3-f325fecccec1_S_secvpfநீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடித்து வரும் படம் ‘சாஹசம்’. இப்படத்தில் பிரசாந்திற்கு ஜோடி தேர்வு செய்யாமலேயே படப்பிடிப்பு நடத்தி வந்தனர். கடைசியாக ஆஸ்திரேலியா அழகியான அமண்டாவை ஒப்பந்தம் செய்து, தற்போது பிரசாந்துடன் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

சாஹசம் படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை கடந்த எட்டு மாதங்களாக இந்தியா முழுவதும் தேடிவந்து, அமண்டாவை கண்டுபிடித்து கதாநாயகியாக்கி உள்ளார் நடிகர் தியாகராஜன்.

இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா ஒரு ஆஸ்திரேலியாவாசி. பாலே நடனத்தில் பல பரிசுகளை வென்ற அமண்டா லண்டன் நடிப்பு பள்ளியில் பட்டம் பெற்றவர். நீளமான வசனங்களை கூட நொடியில் மனப்பாடம் செய்து கொண்டு வசனத்திற்கேற்ப உச்சரிப்புடன் நடிப்பில் வெளுத்து வாங்கிவிடுகிறாராம் அமண்டா.

படப்பிடிப்பில் அமண்டாவின் நடிப்பை பார்த்து நாசர் அசந்து போய், தமிழ் பட உலகிற்கு மற்றுமொரு கைப்படாத ரோஜா என பாராட்டியுள்ளார். அமண்டாவின் பழகும் விதம், காலம் தவறாமை, தொழில் சிரத்தை, கிரங்க வைக்கும் அழகு, மற்றும் கொஞ்சும் தமிழ் இவை எல்லாம் மொத்த படக்குழுவினரையும் வியக்க வைத்துள்ளது.

அமண்டா பற்றி பிரசாந்த் கூறுகையில், ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு, அமண்டாவின் வரவு தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி என்றும், சாஹசம் படம் வெளியீட்டுக்கு பிறகு வெகுவாக பேசப்படும் கதாநாயகி ஆவார் என்றும் விமர்சித்துள்ளார்.

பிரசாந்துடன் இணைந்து சாஹசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் மற்றும் எனது அதிர்ஷ்டமே என அமண்டா கூறியிருக்கிறார்.

ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி சாஹசம் படத்தில் ஒரு பாட்டு நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன் இசையமைத்து வரும் இப்படத்தை அருண்ராஜ் வர்மா இயக்கி வருகிறார். திரைக்கதை, வசனம் எழுதி அதிக பொருட்செலவில் சாஹசம் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விரைவிலும் படத்தை மே மாதம் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries