கிடைத்தது யுஏ, ஆனாலும் படத்தை வாங்க நான் நீ போட்டி

1426937139-0182சகல தரப்பினருக்கும் செமத்தியான லாபத்தை தந்த படம், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த, காஞ்சனா. அதன் இரண்டாம் பாகம் வரும் 17 -ஆம் தேதி வெளியாகிறது.

பொதுவாக யுஏ சான்றிதழ் கிடைத்தால் அப்படத்தை வாங்க தயக்கம் காட்டுவர். 30 சதவீத வஜிச்சலுகையை இழக்க வேண்டுமே என்ற பயம். காஞ்சனா 2 -க்கு யுஏ சான்றிதழ்தான் கிடைத்துள்ளது. ஆனாலும், சகல ஏஜியாக்களிலும் படத்தை வாங்க நீ நான் என்று போட்டிப் போடுகின்றனர்.

மாஸ் நடிகர்களின் படங்களுக்கு முன்பணம் தந்து பெட்டியை வாங்குவது போல் காஞ்சனா 2-க்கும் தரத்தயாராக உள்ளனர். இந்த அபூர்வ வியாபாரம் காரணமாக ஆனந்தத்தில் இருக்கிறார் லாரன்ஸ்.

லாரன்சுடன் தாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries