மாரி படத்தில் நடித்தது அருமையான அனுபவம்: விஜய் யேசுதாஸ்

70f42b38-f127-48ea-9db3-f855c00ab17c_S_secvpf‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து இயக்கவிருக்கும் புதிய படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் விஜய் யேசுதாஸுக்கு போலீஸ் கதாபாத்திரம். இது குறித்து விஜய் யேசுதாஸ் கூறும்போது, ‘நான் அறிமுகமாகும் முதல் தமிழ் படத்திலேயே போலீஸ்வேடம் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தில் நடித்தது அருமையான அனுபவமாக இருந்தது. இதற்கு காரணமான நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online