ஆந்திர அமைச்சருடன் சண்டை போட்ட ஸ்ருதிஹாசன்; அமைச்சர் மறுப்பு

1428760880-1981நடிகை ஸ்ருதிஹாசன் ஆந்திர மந்திரியுடன் போனை ஆஃப் செய்ய சொல்லி சண்டை போட்டுள்ளதாக வெளியான தகவலை அமைச்சர் மறுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தலைக்கோணை நீர்வீழ்ச்சி பகுதியில் ‘‘புலி’’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் ஐதராபாத்திலிருந்து திருப்பதி திரும்ப விமான நிலையம் வந்துள்ளார்.

பின்னர் விமானத்தில் பயணப்பட்டுள்ளார். அதே விமானத்தில் ஆந்திர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கமினேனி ஸ்ரீநிவாஸ் பயணமாகியுள்ளார். சுருதிஹானுக்கு முன் வரிசையில் கமினேனி ஸ்ரீநிவாசுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது.

விமானத்தில் கமினேனி ஸ்ரீநிவாஸ் மொபைல் போனில் சத்தமாக பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த நடிகை ஸ்ருதிஹாசன் போனை சுவிட்ச் ஆப் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அமைச்சர் தொடர்ந்து பேசிக் கொண்டு வந்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த ஸ்ருதிஹாசன் போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று சத்தம் போட்டார். அத்துடன் விமான பணிப்பெண்களையும் அழைத்து புகார் செய்தார்.

ஆனால் இந்த தகவலை அமைச்சர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் ஸ்ருதிஹாசனுடன் எந்த விமானத்திலும் பயணிக்கவில்லை. சமீபகாலமாக திருப்பதிக்கும் பயணம் செய்யவில்லை. பிறகு எவ்வாறு ஸ்ருதிஹாசனுடன் இது போன்று நடந்து கொண்ட விஷயம் வெளியானது என்று தெரியவில்லை.

ஒருவேளை நாங்கள் சந்திருத்திருந்தால் கூட எனக்கு அவரை அடையாளம் காண இயலாது. மேலும், நான் இதுவரையில் எந்த ஒரு பெண்ணையும் கிண்டல் செய்ததோ, தொந்தரவு செய்ததோ கிடையாது. நான் பிறந்ததிலிருந்தே நல்லப் பழக்கத்தைதான் கற்று வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries