உத்தம வில்லனில் யாரையும் புண்படுத்தவில்லை: டைரக்டர் ரமேஷ் அரவிந்த் விளக்கம்

80544ad9-7097-4886-9d24-81994a6598a5_S_secvpfகமல் நடித்துள்ள உத்தமவில்லன் படம் மே 1–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், நடித்துள்ளனர். நாசர், ஊர்வசி மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லுப்பாட்டு பாடல் காட்சியொன்று படத்தில் இடம் பெறுகிறது.

அந்த பாடல் வரிகளில் இந்து கடவுளை விமர்சித்து இருப்பதாக விசுவ இந்து பரிஷத் கண்டித்து உள்ளது. சர்ச்சை காட்சியை நீக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல் இந்திய தேசிய லீக் கட்சியினரும் எதிர்த்துள்ளனர். இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உத்தமவில்லன் படத்தை எடுத்துள்ள கமலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி புகார் அளித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும் போது, உத்தமவில்லன் படத்தில் யாருடைய மனதையும் உணர்வுகளையும் புண்படுத்தும் படியான காட்சிகள் எதுவும் இல்லை.

8–ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடக கலைஞருக்கும் தற்கால கலைஞருக்கும் இடையிலான வாழ்க்கை சார்ந்த படமாகவே இது இருக்கும். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே இடையூறு எதுவும் இல்லாமல் திட்டமிட்டபடி படம் ரிலீசாகும் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online