கற்பழிப்புக்கு எதிராக போராடும் தன்ஷிகா

920f437b-ad53-486b-a059-a93040757361_S_secvpfதமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும், பெரிய இயக்குனர்களின் படங்களில் பணிபுரிந்தும் தன்ஷிகாவுக்கு இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான இடம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

எஸ்.பி.ஜனநாதனின் ‘பேராண்மை’, பாலாவின் ‘பரதேசி’ ஆகிய படங்களில் இவரது திறமையான நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இருந்தும் படவாய்ப்புகள் இவரைத் தேடி வருவது சிரமமாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில், தற்போது தன்ஷிகா நடித்து வரும் ‘திறந்திடு சீசே’ படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுக்கொடுக்கும் என இப்படத்தின் இயக்குனர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான நிமேஷ் வர்ஷன் கூறும்போது, இப்படத்தில் சார்மி என்ற கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடிக்கிறார். கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் வருகிறார்.

இப்படத்தின் கதையை அவரிடம் கூறியதும், எந்தவித படபடப்பும் இல்லாமல் அழுத்தமான இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தைரியத்துடன் ஒப்புக் கொண்டார். ஒரு பப்பில் கற்பழிக்கப்பட்ட அப்பாவி பெண் தன்னுடைய நியாயத்துக்காக போராடுவதே படத்தின் கதை என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries