1500 மாணவர்களுடன் உருவாகும் ஹைக்கூ கிளைமாக்ஸ்

dd2a458d-361c-4268-b06c-0d0bc2703c31_S_secvpfசிறுவர்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவதில் வல்லவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர் இயக்கிய ‘பசங்க’ மற்றும் ‘மெரினா’ படங்களில் சிறுவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருந்தார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘ஹைக்கூ’. இப்படமும் சிறுவர்களை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தை சூர்யா தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் படமாக்கியிருக்கிறார் பாண்டிராஜ். ராமநாதபுரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 1500 பேரை இந்த காட்சியில் நடிக்க வைத்துள்ளார்.

1500 சிறுவர்களும் மரத்தான் போட்டியில் கலந்துக் கொள்வது போன்றும் இதில் சூர்யா இடம் பெறுவது போலவும் காட்சியமைத்திருக்கிறார் பாண்டிராஜ். ராமநாதபுரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில்தான் பாண்டிராஜ் பள்ளிப் படிப்பை பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries